உள்ளூர் செய்திகள்
தடகள போட்டிகளில் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் சாதனை
- சென்னை நேரு விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது.
- எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ரின்சி ரோஸ் குண்டு எறிதலில் 2-ம் இடமும் மற்றும் வட்டு எறிதலில் 3-ம் இடமும், லனிஸ் ஜேசுவா குண்டு எறிதலில் 3-ம் இடமும் பெற்று சாதனை படைத்தனர்.
வள்ளியூர்:
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது. அதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் வர்ஷா உயரம் தாண்டுதலில் 2-ம் இடமும், ரின்சி ரோஸ் குண்டு எறிதலில் 2-ம் இடமும் மற்றும் வட்டு எறிதலில் 3-ம் இடமும், லனிஸ் ஜேசுவா குண்டு எறிதலில் 3-ம் இடமும் பெற்று சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ஜஸ்டின், முனிராஜா,அய்யப்பன் ஆகியோரை பள்ளி சேர்மன் கிரகாம்பெல், பள்ளி தாளாளர் திவாகரன், முதல்வர் சுடலையாண்டி மற்றும் ஆசிரியர்கள்,பெற்றோர்கள் பாராட்டினர்.