உள்ளூர் செய்திகள்

நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழுகூட்டம் நடைபெற்றது.

நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் யூனியன் கவுன்சில் கூட்டம்

Published On 2023-07-15 12:19 IST   |   Update On 2023-07-15 12:19:00 IST
  • கூட்டத்தில் கவுன்சிலர்களின் பல்வேறு கேள்விகளுக்கு,ஒன்றிய குழு தலைவர் மற்றும் அலுவலர்கள் பதில் தெரிவித்தனர்.
  • லிங்கவாடி -மலையூருக்கு இடையே ரூ.7.5 கோடி மதிப்பில் தார் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் யூனியன் அலுவலக கூட்ட அரங்க வளாகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் தலைமை தாங்கினார்.ஆணையாளர் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் வேதா, ஒன்றிய குழு துணை தலைவர் முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்ட அறிக்கையை இளநிலை உதவியாளர் கருப்பணபிள்ளை வாசி த்தார். கூட்டத்தில் கவுன்சிலர்களின் பல்வேறு கேள்விகளுக்கு,ஒன்றிய குழு தலைவர் மற்றும் அலுவ லர்கள் பதில் தெரிவித்தனர். மேலும் இந்த கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் கண்ணன் கூறியதாவது: லிங்கவாடி -மலையூருக்கு இடையே ரூ.7.5 கோடி மதிப்பில் தார் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

சின்ன மலையூர்,பெரிய மலையூர், கரந்தமலை வலசு ஆகிய மூன்று கிராமங்களுக்குள் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் சாலை வசதியை முறைப்படி தொடங்குவதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. இது தவிர மதுரை-துவரங்கு றிச்சி நான்கு வழிச்சாலையில் பொதுமக்கள் நலன்கருதி தேவையான இடங்களிலும் குடிநீர் வசதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நத்தம் ஒன்றிய பகுதிகளில் இடிக்கப்பட்ட பள்ளிக்கூட கட்டிடங்க ளுக்கு பதிலாக புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரக்கூடிய காலங்களில் வரும் அரசு நிதிகளை முறையாக பிரித்து வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் வரவு செலவு உள்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது. அலுவலக மேலாளர் சாந்தி தேவி நன்றி கூறினார். முன்னதாக கூட்டத்தில் கவுன்சிலர்கள், அரசு துறை அனைத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News