உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரை ஆசிரியரிடம் ரூ.3 லட்சம் திருடிய மர்ம நபர்

Published On 2022-06-10 15:51 IST   |   Update On 2022-06-10 15:51:00 IST
  • இருசக்கர வாகனத்தின் பெட்டியில் இருந்த பணம் மாயம் ஆனது.
  • போலீசில் புகார் கொடுத்தார்.

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை முல்லை நகர் சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 53). ஓய்வு பெற்ற ஆசிரியர்.இவர் தனது ஆடிட்டரை பார்ப்பதற்காக சேலம் சென்றுள்ளார்.

அப்போது அவர் தனது இருசக்கர வாகனத்தின் பெட்டியில் ரூ.2.95 லட்சம் பணத்தை வைத்திருந்துள்ளார்.

திரும்பி வந்து பார்த்த போது யாரோ மர்ம நபர் அந்த பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

அதிர்ச்சி அடைந்த ராமலிங்கம் இது குறித்து ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார் .

போலீசார் வழக்கு பதிந்து மர்ம திருடனை தேடி வருகின்றனர்.

Similar News