உள்ளூர் செய்திகள்
வடக்கு பொய்கை நல்லூரில் ஊஞ்சல் உற்சவம்.
வடக்கு பொய்கைநல்லூரில் நந்தி நாதேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
- கோவிலின் ராசி மக பிரமோற்சவ பெருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
- நந்திநாதேஸ்வரர், சௌந்தர நாயகிஅம்மன் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வடக்கு பொய்கைநல்லூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ நந்தி நாதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
கோவிலின் ராசி மக பிரமோற்சவ பெருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
முக்கிய நிகழ்ச்சியான ஊஞ்சல் உற்சவம் நந்திநாதேஸ்வரர், சௌந்தர நாயகிஅம்மன் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினர் சிவாச்சாரியார்கள் பக்தி பாடல்களை பாடினர்.
இதனையடுத்து, மஹாதீபாராதனை காட்டப்பட்டன.
அதனை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
விழா ஏற்பாடுகளை நந்தவன காளியம்மன் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.