உள்ளூர் செய்திகள்

கொடை விழாவையொட்டி சுடலை ஆண்டவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டிருந்ததையும், விழாவில் பங்கேற்ற பக்தர்களையும் படத்தில் காணலாம்.

திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா

Published On 2023-08-26 08:57 GMT   |   Update On 2023-08-26 08:57 GMT
  • விழா நாட்களில் விளையாட்டு போட்டிகள் உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.
  • சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, சிறப்பு தொடர் அன்னதானம் நடந்தது.

திசையன்விளை:

பிரசித்தி பெற்ற திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா ஆண்டுதோறும் ஆவணி மாதம் முதல் வாரத்தில் சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான கொடைவிழா கடந்த 20-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் விளையாட்டு போட்டிகள் கலர் கோலப்போட்டி, நாடகம், இன்னிசை கச்சேரிகள், மாங்கல்ய பூஜை, திருவிளக்கு பூஜை உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.

விழாவின் சிகர நிகழ்சியாக நேற்று அன்னபூஜையுடன் விழா தொடங்கியது. காலை 11 மணிக்கு மன்னர் ராஜா கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க குதிரைகள் முன் செல்லமுத்து குடைபவனி வர மஞ்சள் பெட்டி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிவழியாக சென்று கோவிலை அடைந்தது.

தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, சுவாமி மஞ்சள் நீராடுதல், சிறப்பு தொடர் அன்னதானம் நடந்தது. மாலையில் சமய சொற்பொழிவு, இரவு கரகாட்டம், மகுட ஆட்டம், வில்லிசை, பரிசளிப்பு விழா, சிலம்பாட்டம், பொம்மலாட்டம் பேஷன் ஷோ, முன்னாள் அரசு வக்கில் பழனி சங்கர் சார்பில் நகைச்சுவை பட்டிமன்றம், இசை திறன் போட்டி, நள்ளிரவு சுவாமிக்கு விசேச அலங்கார பூஜை, சுவாமி வேட்டைக்கு செல்லுதல், சுவாமி முட்டை விளையாட்டு உள்பட பல்வேறு நிகழ்சிகள் அதிகாலை வரை நடந்தது.

விழாவில் ஸ்டார் சேம்பர் பிரிக்ஸ் ஏ.எஸ். குமார், கே.ஆர்.பி. டிரேடர்ஸ் என்ஜினீயர் கனகராஜ், திசையன்விளை பேரூராட்சி முன்னாள் தலைவர் டாக்டர் புஸ்பலெட்சுமி, டி.கே. ராஜா அண்ணாமலை, தங்கையா சுவிட்ஸ் கணேசன், முருகேசன், ஜி.பி.எம். குமார், ஆகாஷ், முன்னாள் அரசு கூடுதல் வக்கீல் பழனிசங்கர், ரோட்டரி அட்வகேட் கில்டா பழனிசங்கர், நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார், தொழில் அதிபர் சரவணக்குமார், லயன்ஸ் பள்ளி தாளாளர் சுயம்புராஜன், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி தலைவர் கமலா சுயம்புராஜன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் செய்திருந்தார்.

Tags:    

Similar News