ஐ.டி.ஐ. மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்
- வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடிவருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் அருகே உள்ள புனே–பள்ளியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அரசு ஐ.டி.ஐ.யில் படித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடிவருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் கொடுமணபள்ளியைச் சேர்ந்த 17வயது சிறுமி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இதற்காக அந்த சிறுமி கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார். கடந்த மாதம் 17-ந் தேதி மாணவி, கல்லூரியில் இருந்து வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால், அந்த மாணவி, வீட்டிற்கு செல்லவில்லை.
இதுகுறித்து மாணவியின் தந்தை சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.