- வாலிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
- மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்ப வில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே நெல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மனைவி லட்சுமி (வயது40). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு லட்சுமியின் மகள் வாலிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார். அவர் தனது பெற்றோருக்கு தெரி யாமல் காதல் திருமணம் செய்து கொண்டதால், லட்சுமி மனவேதனையில் இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று லட்சுமி வீட்டை விட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ராஜேந்திரன் ராயக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான லட்சுமியை தேடி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை அருகே பூபட்டி பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சிறுமி வீட்டைவிட்டு சென்றார். ஆனால், மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து சிறுமியின் தாய் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.