உள்ளூர் செய்திகள்

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

Published On 2023-08-15 14:01 IST   |   Update On 2023-08-15 14:01:00 IST
  • வேனை ஓட்டி வந்த வேப்பனப்பள்ளி ரமேஷ் (38) மற்றும் அருண் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
  • பொதுமக்களிடம் குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகத்தில் அதிக விலைக்கு விற்க முயன்றது தெரிந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அடுத்த சீலேப்பள்ளியில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் மற்றும் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த பிக்கப் வேனை மடக்கி சோதனயிட்டதில், 50 கிலோ அளவிலான, 30 மூட்டைகளில், 1,500 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரிந்தது.

இதையடுத்து, பிக்கப் வேனை பறிமுதல் செய்த போலீசார், வேனை ஓட்டி வந்த வேப்பனப்பள்ளி ரமேஷ் (38) மற்றும் அருண் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பூசாரிப்பட்டி, காட்டிநாயனப்பள்ளி பகுதிகளில் பொதுமக்களிடம் குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகத்தில் அதிக விலைக்கு விற்க முயன்றது தெரிந்தது.

இது தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News