உள்ளூர் செய்திகள்

ஊராட்சி தலைவர் ஐவராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.


திப்பணம்பட்டியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை

Published On 2022-06-20 14:23 IST   |   Update On 2022-06-20 14:27:00 IST
  • எம்.எஸ்.கே. ஆலங்குளம் அணியினர் முதல் பரிசான சுழற் கோப்பையை தட்டிச் சென்றனர்.
  • ஊராட்சி தலைவர் ஐவராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.

தென்காசி:

கீழப்பாவூர் அருகே உள்ள திப்பணம்பட்டியில் வி.கே.எஸ் நண்பர்கள் திப்பணம்பட்டி கிரிக்கெட் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான 2-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டன. அதன் இறுதிப் போட்டிகள் நேற்று நடைபெற்றது.

அதில் வெற்றி பெற்ற எம்.எஸ்.கே. ஆலங்குளம் அணியினர் முதல் பரிசான சுழற் கோப்பையை தட்டிச் சென்றனர். அவர்களுக்கு ரொக்கப்பணம் ரூ.12 ஆயிரம் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசை திப்பணம்பட்டி வி.கே.எஸ். அணியினர் வென்றனர்.

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு வழங்கும் விழா திப்பணம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் ஐவராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.

Tags:    

Similar News