உள்ளூர் செய்திகள்
ஆசிரியை தாயாரின் 4 பவுன் செயின் பறிப்பு
- சமயபுரம் சென்று விட்டு திரும்பியபோது சம்பவம்
- போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
திருச்சி.
திருச்சி கே.கே. நகர் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகள் சௌமியா நாராயணன். இவர் கே.கே. நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் அவர் தனது தாயார் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு காரில் சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் பலூர் காமாட்சி பவன் ஹோட்டல் பகுதியில் நடந்து சென்றபோது கூட்ட நெரிசலில் அவரது தாயார் அணிந்திருந்த 4 பவுன் செயினை மர்ம நபர்கள் பரிசு சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சௌமியா நாராயணன் கொள்ளிடம் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை