உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவர் தூக்கு போட்டு சாவு
- பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தவர்
- விமான பைலட் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டவர் தற்கொலை
திருச்சி,
திருச்சி பஞ்சப்பூர் விநாயகா நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் நவீன் குமார் (வயது 17). இவர் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்துள்ளார். இதனால் 12-ஆம் வகுப்பு முடித்தவுடன் விமான பைலட் ஆக ஆசைப்பட்டு அதற்கு ஏற்றவாறு படித்து வந்துள்ளார் .ஆனால் தற்போது பிளஸ் டூ தேர்வு நடைபெற உள்ள நிலையில் பள்ளியில் நடத்தப்பட்ட முன்பருவ தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த நவீன் குமார் நேற்று வீட்டு மின்விசிறியில் துண்டால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை சுரேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் எடமலைப் பட்டிபுதூர் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.