உள்ளூர் செய்திகள்

திருச்சி ரெயில்வேயில் அதிக அளவில் உடமைகளை தவற விட்டு இறங்கும் பயணிகள்

Published On 2022-08-23 10:03 GMT   |   Update On 2022-08-23 10:03 GMT
  • கடந்த ஜனவரி 2020 முதல் ஜூலை 2022 வரை பயணிகள் மறதியால் விட்டுச் சென்ற நகை மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.35 லட்சத்து 18 ஆயிரம் ஆகும். இதில் பெரும்பாலான பொருட்கள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது
  • 2021-ல் 60 செல்போன்கள், 6 மடிக்கணினிகள், 75 ஆயிரம் மதிப்பிலான நகைகள் மற்றும் 71 இதர பொருட்கள் என மொத்தம் ரூ.15 லட்சத்தில் 59 ஆயிரத்து 831 மதிப்புள்ள பொருட்களை தவற விட்டு சென்றிருக்கிறார்கள்.

திருச்சி

திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்டு 150 ெரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ெரயில் நிலையங்களில் உள்ள ஓய்வறைகள் மற்றும் ெரயில்களில் செல்போன்கள் மற்றும் உடமைகளை தொலைப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ெரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி 2020 முதல் ஜூலை 2022 வரை பயணிகள் மறதியால் விட்டுச் சென்ற நகை மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.35 லட்சத்து 18 ஆயிரம் ஆகும். இதில் பெரும்பாலான பொருட்கள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரானிக் பொருட்களை பொருத்தமட்டில் குறிப்பாக செல்போன்கள், சார்ஜர்கள் அதிகமாக உள்ளன. பயணிகள் ெரயில் பெட்டிக்கு உள்ளேயும், ெரயில் நிலையங்களிலும் சார்ஜ் ஏற்றிவிட்டு பின்னர் மறந்து ெரயிலில் ஏறி சென்று விடுகிறார்கள்.

இவ்வாறு செல்போன்களை தவறவிடுவது ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2020-ல் 17 செல்போன்கள், இரண்டு மடிக்கணினிகள், ரூ.6 லட்சத்து 55 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் இதர பொருட்கள் என மொத்தம் ரூ.9 லட்சத்து 33 ஆயிரத்து 768 மதிப்பெண் பொருட்களை பயணிகள் ெரயில்கள் மற்றும் ெரயில் நிலையங்களில் தொலைத்தனர். குறிப்பாக இந்த காலகட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக சிறப்பு ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 2021-ல் 60 செல்போன்கள், 6 மடிக்கணினிகள், 75 ஆயிரம் மதிப்பிலான நகைகள் மற்றும் 71 இதர பொருட்கள் என மொத்தம் ரூ.15 லட்சத்தில் 59 ஆயிரத்து 831 மதிப்புள்ள பொருட்களை தவற விட்டு சென்றிருக்கிறார்கள்.

நடப்பாண்டில் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை மட்டுமே 61 செல்போன்களை தொலைத்திருக்கிறார்கள். மேலும் 13 மடிக்கணினிகள், ரூ.2 லட்சத்தி 31 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் 68, இதர பொருட்கள் என மொத்தம் ரூ.19 லட்சத்து 58 ஆயிரத்து 725 மதிப்புள்ள பொருட்களை பயணிகள் தொலைத்துள்ளனர்.

உரிய ஆவணங்களுடன் உரிமையாளர்கள் வராத பட்சத்தில் அந்த பொருட்கள் கமர்சியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்டு ஏலம் விடப்படுகிறது. இதுபற்றி ெரயில்வே அலுவலர் ஒருவர் கூறுகையில், ெரயிலில் ஏறும் பயணிகள் தங்களது உடமைகளை இருக்கைக்கு அடியில் தள்ளி விடுகிறார்கள். பின்னர் இறங்கும்போது அவசரத்தில் ஏதாவது ஒரு லக்கேஜை தவறவிட்டு இறங்கி செல்கிறார்கள். சில நேரங்களில் தவறவிடும் பையில் நகைகள் கூட இருக்கும்.

இதில் உரிய ஆவணங்கள், சரியான தகவல்கள் இருந்தால் மட்டுமே நகைகளை ெரயில்வே பாதுகாப்பு படையினர் ஒப்படைப்பார்கள். பயணிகள் தங்களது லக்கேஜ்களின் உள்பக்கமும் வெளிப்பக்கமும் முகவரியை எழுதி வைத்திருந்தால் எளிதாக அவர்களின் பொருள்களை திரும்ப பெற்றுச் செல்லலாம்.

இருப்பினும் 99 சதவீத பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ெரயில் நிலையங்களில் தங்கள் உடமைகளை தவறவிடும் நபர்கள் உடனடியாக 139 என்ற அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினால் ெரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் என ெரயில்வே பாதுகாப்பு படை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News