உள்ளூர் செய்திகள்

போதை மாத்திரை, ஊசி விற்றவர்கள் கைது

Published On 2023-08-17 14:42 IST   |   Update On 2023-08-17 14:42:00 IST
  • திருச்சியில் போதை மாத்திரை, ஊசி விற்ற இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்
  • 300 மாத்திரைகள்,வேதிஉப்புநீர் (ஷலைன்) பாட்டில்கள், ஊசிகள் பறிமுதல்

திருச்சி, 

திருச்சி கோட்டை கீழரண்சாலை பகுதியில் உள்ள ஒரு திரையரங்கம் அருகே 2 பேர் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக போலீசா ருக்கு தகவல் கிடைத்தது. காவல் ஆய்வாளர் சிவராமன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டதில் 2 பேர் போதை மாத்திரையை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகரை சேர்ந்த ரெ. யோகானந்தம் (23), அ. தர்மதுரை (19) ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.3,000 மதிப்புள்ள 300 மாத்திரைகள்,வேதிஉப்புநீர் (ஷலைன்) பாட்டில் ஒன்று, ஊசிகள் ஐந்து ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் . இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News