திருச்சி நவல்பட்டு அருகே பட்டப்பகலில் துணிகரம்-மூதாட்டிக்கு லிப்ட் கொடுத்தும், மற்றொரு பெண்ணை வழிமறித்தும் செயின் பறிப்பு
- மூதாட்டிக்கு லிப்ட் கொடுத்தும், மற்றொரு பெண்ணை வழிமறித்தும் செயின் பறிப்பு சம்பவம் நடந்தது
- இச்சம்பவங்கள் குறித்து நவல்பட்டு, திருவெறும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி:
திருச்சியை அடுத்த குண்டூர் ஆஞ்சநேய நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பன். இவரது மனைவி ஆரோக்கியம்மாள் (வயது 80). இந்த மூதாட்டி ஆஞ்சநேய நகர் எம்.ஐ.இ.டி. பஸ் நிறுத்தம் பகுதி–யில் நடந்து சென்று கொண்டி–ருந்தார். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டி மோட்டார் சைக்கி–ளில் வந்த ஒரு மர்ம நபர் மூதாட்டி அருகில் மோட்டார் சைக்கிளை கொண்டு போய் நிறுத்தி உள்ளார். மிகவும் பழக்கமானவர் போல் பேசி உதவி செய்வதாகவும் தெரி–வித்தார். பின்னர் அவரிடம் பேச்சு கொடுத்தவாறு வீட்டிற்கு கொண்டு போய் விடுகிறேன்,
மோட்டார் சைக்கிளில் ஏறுங்கள் என கூறியுள்ளார். மூதாட்டியும் அவரை நம்பி மோட்டார் சைக்கிளில் ஏறி உள்ளார். ஆனால் அந்த நபர் மூதாட்டி வீட்டுக்கு செல்லாமல் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வாகனத்தை ஓட்டிச் சென்றார். பின்னர் அங்கு வைத்து மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து விட்டு தப்பி ஓடினார். இது தொடர்பாக நவல்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம ஆசாமியை தேடி வரு–கின்றனர்.
திருச்சி காட்டூர் கைலாஷ் நகர் காந்தி ரோடு 2-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பிள்ளை. இவரது மனைவி இந்திரா (58). இவர் அங்குள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது ஸ்கூட்டி மாடல் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் அவரை வழிமறித்து இந்திராவின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துவிட்டு தப்பிச்சென்றார்.
மேற்கண்ட ஆரோக்கியம் மாள் செயினை பறித்த அதே நபர்தான் இந்திரா–விடமும் கைவரிசை காட்டி இருக்கலாம் என சந்தே–கிக்கப்படுகிறது. இது–குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவம் மேற்கண்ட பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.