உள்ளூர் செய்திகள்

திருச்சி அருகே இளமாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-09-07 10:12 GMT   |   Update On 2022-09-07 10:12 GMT
  • திருச்சி அருகே சோமரசம்பேட்டையில் பிரசித்தி பெற்ற இளமாயி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது
  • விழாவை முன்னிட்டு மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

திருச்சி:

திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டையில் பிரசித்தி பெற்ற பழமையான இளமாயி அம்மன், தென்னவெட்டை கருப்பு, சூரிய விநாயகர், மதுரைவீரன், பட்டவன், சம்புவான் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்ய பொதுமக்களால் முடிவு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களாக கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.

அதன்படி பணிகள் நிறைவடைந்து நேற்று முன்தினம் காவிரி கரையில் இருந்து பக்தர்கள் புனிதநீர் எடுத்து வந்து முதல் கால பூஜையும் நேற்று இரண்டாம் கால பூஜை மற்றும் மூன்றாம் கால பூஜையும் நடைபெற்றது.

இன்று காலை 6.30 மணி அளவில் நான்காம் கால பூஜையும், பின்னர் காலை 9 மணிக்கு மேல் 10.29 மணிக்குள் கடகம் புறப்பாடு நடைபெற்றது.

இதையடுத்து கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

பின்பு மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி, சோமரசம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் குணவதி துரைபாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாங்கம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News