தோளூர்பட்டி ஏரியில் 700 பனைமர விதைகளை நடவு செய்த அரசு பள்ளி மாணவர்கள்
- கொசவம்பட்டியில் அமைந்துள்ள அரசு பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தோளூர்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.
- முகாமில் தோளூர்பட்டி ஏரியில் சுமார் 700க்கும் மேற்பட்ட பனைமர விதைகளை மாணவர்கள் விதைத்தனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் தொட்டியம் கொசவம்பட்டியில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தோளூர்பட்டி கிராமத்தில் 7நாட்கள் நடைபெற்றது.
முகாமை பள்ளி தலைமை ஆசிரியர் நந்தகுமார் தொடங்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் பழனியப்பன், தோளூர் பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி சரவணன், தோளூர்பட்டி தூய வளனார் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விமலாமார்கிரேட் மற்றும் தோளூர்பட்டி ஒன்றிய கவுன்சிலர் மேஸ்திரிமுருகன் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராம்கி, ஜெயந்தி, பழனியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 29- பேர் ஏழு நாட்களில் தோளூர்பட்டி கோயில்களின் வளாகம் மற்றும் கோயிலின் உள்புறம் அனைத்து இடங்களிலும் மிகவும் தூய்மையாக சுத்தம் செய்தனர். தோளூர்பட்டி ஏரிக்கரையில் சுமார் 700-க்கும் மேற்பட்ட பனைமர விதைகளை விதைத்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு பணித்திட்ட திட்ட அலுவலரும் மற்றும் பள்ளி முதுகலை ஆசிரியருமான மு. கேசவமூர்த்தி செய்திருந்தார்.