உள்ளூர் செய்திகள்

மணப்பாறை தோட்டத்துறையில் இலவச பனை மர விதைகள் - வேளாண் அதிகாரி தகவல்

Published On 2022-10-22 15:05 IST   |   Update On 2022-10-22 15:05:00 IST
  • தோட்டக்கலை துறையின் மூலம் மணப்பாறை வட்டார விவசாயிகளுக்கு 100 சதவீகிதம் மானிய விலையில் பனை விதைகள் விநியோகிக்கப்படஉள்ளது.
  • மேலும் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 விதைகள் மட்டும் வழங்கப்படும்

திருச்சி.

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சிவராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது :

தோட்டக்கலை துறையின் மூலம் மணப்பாறை வட்டார விவசாயிகளுக்கு 100 சதவீகிதம் மானிய விலையில் பனை விதைகள் விநியோகிக்கப்படஉள்ளது.

தோட்டக்கலை துறையின் மூலம் பனை மேம்ப்பாட்டு இயக்கம் திட்டத்தின் கீழ் பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்க்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்க்காகவும் 100 சதவீகிதம் மானிய விலையில் பனை விதைகள் விநியோகிக்கப்படஉள்ளது.

மேலும் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 விதைகள் மட்டும் வழங்கப்படும் எனவும் பனை சாகுபடி செய்ய ஆர்வம் உள்ள விவசாயிகள் மணப்பாறை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News