- 4 ரவுடிகள் தப்பி ஓட்டம்
- போலீசார் வழக்கு பதிந்து வலை வீச்சு
திருச்சி,
ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சேதுபதி (வயது 29).இவர் திருச்சி தனியார் டெலி .கம்யூனிகேஷன் நிறுவனத்தில் கேபிள் பணியாளராக பணிபுரிந்து வருகிறார் . இவர் திருச்சி சங்கிலியாண்டபுரம் காசியாபிள்ளை காலனி வாட்டர் டேங்க் எதிரில் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் இவரை மிரட்டி அரிவாளால் தாக்கி, இவரிடம் இருந்த ரூ.4200 பணத்தை பறித்து சென்று விட்டனர். இதில் காயமடைந்த சேதுபதி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் திருச்சி சங்கிலியாண்ட புரம் ராமமூர்த்தி நகரை சேர்ந்த இளையராஜா, எதுமலை உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதில் இளையராஜா எதுமலை ஆகிய இரண்டு பேரும் ரவுடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.