உள்ளூர் செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-08 15:54 IST   |   Update On 2022-06-08 16:02:00 IST
  • திருச்சியில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • பஞ்சப்படி உள்ளிட்ட 23 சலுகைகளை பறிக்கும் வாரிய ஆணையை ரத்து செய்ய வேண்டும், 3 ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ள சரண்டர் விடுப்பை உடனே வழங்க வேண்டும்

திருச்சி:

மின்வாரிய பணியாளர்களுக்கு 2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் உடனே வழங்க வேண்டும். பஞ்சப்படி உள்ளிட்ட 23 சலுகைகளை பறிக்கும் வாரிய ஆணையை ரத்து செய்ய வேண்டும். 3 ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ள சரண்டர் விடுப்பை உடனே வழங்க வேண்டும்.

மின் வாரியத்தில் காலியாக உள்ள 52 ஆயிரம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி அண்ணா தொழிற்சங்க பேரவை அருள், பொறியாளர் கழக ஸ்ரீதர், என்ஜினீயர் சங்கம் சம்பத், ஐக்கிய சங்கம் கண்ணன், பெடரேஷன் சிவ செல்வம், சி.ஐ.டி.யு. அகஸ்டின்,

சம்மேளனம் தங்கவேல், ஏ.இ.எஸ்.யூ. சங்க பெரியசாமி, ஐ.என்.டி.யு.சி. கருணாநிதி, ஓய்வு பெற்றோர் சங்க கிருஷ்ணமூர்த்தி, ரெங்கராஜ், மின்துறை பொறியாளர் அமைப்பு இருதயராஜ் ஆகியோர் பேசினர்.

இதில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News