உள்ளூர் செய்திகள்
டாக்டர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை
- டாக்டர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டை பூட்டி விட்டு பெரம்பலூர் வரை சென்றுள்ளார்.
திருச்சி:
திருச்சி உறையூர் ராமலிங்க நகர் தெற்கு விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் சரவண குமார்(வயது 48). இவர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு பெரம்பலூர் வரை சென்றுள்ளார்.
திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து உறையூர் போலீஸ் ஸ்டேஷனில் அவர் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.