உள்ளூர் செய்திகள்

மறைந்த தேசியக்கல்லூரி தலைவர் கிருஷ்ணமூர்த்திக்கு இரங்கல் கூட்டம்

Published On 2022-06-28 09:35 GMT   |   Update On 2022-06-28 09:35 GMT
  • மறைந்த திருச்சி தேசியக்கல்லூரி நிர்வாகக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்திக்கு இன்று கல்லூரி முதல்வர் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது
  • கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். சுந்தரராமன், மறைந்த கல்லூரி தலைவர் முனைவர் வி.கிருஷ்ணமூர்த்தியின் அளப்பரிய பணிகள், சேவைகள் பல்வேறு சாதனைகளைப் பாராட்டி நினைவு கூர்ந்தார்

திருச்சி:

திருச்சி தேசிய கல்லூரியின் நிர்வாகக்குழு தலைவர் தலைவர் டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி வயது மூப்பு காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் காலமானார்.

பாரம்பரியமிக்க கல்வி நிறுவனமான திருச்சி தேசிய கல்லூரியின் தலைவராக 2007-ல் பொறுப்பேற்ற அவர் தொடர்ந்து கல்லூ–ரியின் அனைத்து நிலை வளர்ச்சிக்கும் உறு–துணை–யாக இருந்து பாடுபட்டுள்ளார்.

அவரது மறைவுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் , டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி தலைவர் வேணு சீனிவாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே சென்னை போர்ட் கிளப்பில் உள்ள வீட்டில் அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அதிகாரிகள், தேசியக்கல்லூரி செயலாளர் ரகுநாதன், கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.சுந்தரராமன், பேராசிரியர்கள், ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் மறைந்த திருச்சி, தேசியக்கல்லூரியின் நிர்வாகக் குழுத் தலைவர் பத்மவிபூசன் முனைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தியின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆர்.சுந்தரராமன் தலைமையில் திரளான பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இரங்கல் கூட்டம் இன்று (28-ந்தேதி, செவ்வாய்க்கிழமை) கல்லூரி வளாகத்தில் நடந்தது.

கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். சுந்தரராமன், மறைந்த கல்லூரி தலைவர் முனைவர் வி.கிருஷ்ணமூர்த்தியின் அளப்பரிய பணிகள், சேவைகள் பல்வேறு சாதனைகளைப் பாராட்டி நினைவு கூர்ந்தார். நிறைவாக அனைவரும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலியும் மலர் அஞ்சலியும் செலுத்தினர்.

Tags:    

Similar News