உள்ளூர் செய்திகள்

திருச்சி திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவராக மெடிக்கல் முரளி பதவியேற்பு

Published On 2022-08-22 10:02 GMT   |   Update On 2022-08-22 10:02 GMT
  • துறையூர் நகர தி.மு.க. செயலாளரும், நகர்மன்ற துணைத் தலைவருமான மெடிக்கல் முரளி மாவட்ட அறங்காவலர் நியமன குழு தலைவராக தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டார்.
  • இந்நிகழ்ச்சிக்கு தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார்.

திருச்சி :

தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோவில்களில் வழிபாடு மற்றும் அனைத்து செயல்பாடுகளும் தாமதம் இன்றி நடைபெற அறங்காவலர் குழுக்களை நியமனம் செய்ய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அந்த வகையில் துறையூர் நகர தி.மு.க. செயலாளரும், நகர்மன்ற துணைத் தலைவருமான மெடிக்கல் முரளி மாவட்ட அறங்காவலர் நியமன குழு தலைவராக தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பதவி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் திருமணம் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். இதில் போது மாவட்ட அறங்காவலர் நியமன குழு தலைவராக மெடிக்கல் முரளி மற்றும் நான்கு உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, கதிரவன், மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி,

இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர்கள் லட்சுமணன், ரவிச்சந்திரன், ஹரிஹர சுப்பிரமணியன், துறையூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் அண்ணாதுரை, வீரபத்திரன், சரவணன், அமைப்பாளர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், மாவட்ட பிரதிநிதி மதியழகன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News