உள்ளூர் செய்திகள்

இருசக்கர வாகன நிறுத்துமிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு

Published On 2022-09-20 09:28 GMT   |   Update On 2022-09-20 09:28 GMT
  • இருசக்கர வாகன நிறுத்துமிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
  • திருச்சி மத்திய, சத்திரம் பஸ் நிலையங்களில்

திருச்சி:

திருச்சி மத்திய பஸ் நிலையம் மற்றும் சத்திரம் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இரு சக்கர வாகன நிறுத்தமிடங்கள் உள்ளன. இது தனியாருக்கு ஏலம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஏலதாரர்கள் விதிகளை மீறி வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

24 மணி நேரத்துக்குஒரு மோட்டார் சைக்கிளுக்கு ரூ. 15 வசூலிக்க வேண்டும் என்பது விதிமுறையாக இருக்கிறது.

ஆனால் இந்த வாகன நிறுத்துமிடங்களில் காலை 10 மணிக்கு வாகனத்தை நிறுத்தி விட்டு மறுநாள் காலை 9 மணிக்கு வாகனத்தை எடுக்கச் சென்றால் இரண்டு நாட்களுக்கு உரிய கட்டணத் தொகை ரூ.30 வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து கேட்டால் நள்ளிரவு 12 மணியுடன் ஒரு நாள் கணக்கு முடிந்து விடுகிறது. அதற்குப் பின்னர் ஒரு மணி நேரம் தாமதமாக வண்டி எடுத்தாலும் இன்னொரு நாள் கணக்கு வந்துவிடும் என புதிய விளக்கம் அளிக்கிறார்கள்.

12 மணி நேரத்துக்கு ரூ. 15 வசூல் செய்வது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சுமையாக உள்ளது.

வாகன ஓட்டிகளிடம் அடாவடித்தனமாக கட்டணம் வசூலிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதில் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிகள் மீறி கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News