உள்ளூர் செய்திகள்
- திருச்சி காப்பகத்தில் இருந்து 2 சிறுமிகள் தப்பி ஓடியுள்ளனர்
- கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்கு பதிவு மாயமான சிறுமிகளை தேடி வருகிறார்.
திருச்சி,
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே வி.என்.நகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று உள்ளது. காப்பகத்தின் பொறுப்பாளர் ஜூலியட் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் காப்பகத்தில் தங்கி இருந்த திருச்சி இனியானூர் இந்திரா நகரை சேர்ந்த முத்துப்பாண்டி மகள் ஜனனி (வயது 17).தஞ்சை மாவட்டம் தொண்டைமான் சாலை பர்மா காலணியைச் சேர்ந்த சின்னத்துரை மகள் கீர்த்தனா (வ 16)ஆகிய இரண்டு பேர் தங்கி இருந்தனர். அவர்கள் கடந்த 24-ந்தேதி காப்பகத்தை விட்டு வெளியேறி விட்டனர் .அவர்களை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். புகாரின் பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்கு பதிவு மாயமான சிறுமிகளை தேடி வருகிறார்.