மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா
- 100 நாட்கள் 100 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க அறிவுறுத்தினார்.
- சிறப்பான முறையில் மரக்கன்றுகள் வளர்க்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய பசுமைப் படையின் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு 100 நாள் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தொடங்கியது.
திருப்புகலூர் ஊராட்சி மன்றத் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கி மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மாணவர்கள் தங்கள் இல்லங்களில் ஒரு நாளைக்கு ஒரு மரக்கன்று என்ற முறையில் 100 நாட்கள் 100 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க அறிவுறுத்தினார்.
மேலும் சிறப்பான முறையில் மரக்கன்றுகள் வளர்க்கும் மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக பரிசுகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) தமிழ்ச்செல்வி, தேசிய பசுமை படையின் ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் ஐசக்காட்சன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.