உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் மரங்கள் வெட்டி சாய்ப்பு: தலைமை ஆசிரியரிடம் தாசில்தார் விசாரணை

Published On 2023-10-05 15:24 IST   |   Update On 2023-10-05 15:24:00 IST
  • தேன்கனிக்கோட்டையில் அருகே அரசு பள்ளியில் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது
  • வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே எஸ்.குருபட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. தெலுங்கு ஆங்கில வழியில் 20 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக நாராயணப்பா பணிபுரிந்து வருகிறார்.

இப்பள்ளி வளாகத்தில் கடந்த 20 வருடங்களாக பல்வேறு மரங்கள் அப்பகுதி மக்கள் நட்டு மரங்களை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை பள்ளி வளாகத்தில் உள்ள 3 மரங்களை தலைமை ஆசிரியர் நாராணப்பா ஆட்களை வைத்து வெட்டி அகற்றினார். இதையறிந்த கிராம மக்கள் தலைமை ஆசிரியரிடம் மரங்களை ஏன் வெட்டினீர்கள், மரங்களை வெட்ட அனுமதி பெற்றுள்ளீர்களா என சரமாரியாக கேள்வி கேட்டனர். அதற்கு அவர், பொதுமக்களிடம் உரிய பதில் கூறாமல் சென்றார்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து தேன்கனிக்கோட்டை தாசில்தார் பரிமேலழகர், வட்டார கல்வி அலுவலர் கோவிந்தப்பா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் புகார் தெரிவித்தனர். இதன் பேரில் வட்டார கல்வி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் தலைமையா சிரியரிடம் நேற்று விசாரணை செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று தாசில்தார் பரிமேலழகர், தலைமை யாசிரியர் நாரா ணப்பாவிடம் விசாரணை நடத்தினார். அப்போது பள்ளி சுற்று சுவரில் மரங்கள் சாய்ந்து விழும் நிலையில் இருந்ததால், அந்த மரங்களை வெட்டியதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News