உள்ளூர் செய்திகள்

பெரும்பாறையில் சாலையோரத்தில் உள்ள கடைகள் மீது மரம் விழுந்து சேதம் அடைந்துள்ளது.

பெரும்பாறை அருகே மரம் விழுந்து 6 கடைகள் சேதம்

Published On 2022-06-13 04:09 GMT   |   Update On 2022-06-13 04:09 GMT
  • பெரும்பாறையில் சாலையோரத்தில் பெட்டி கடை வைத்து அப்பகுதி வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.
  • இலவ மரங்களை வெட்டியதால் சாலை யோரங்களில் உள்ள தகர கடைகளின் மேற்கூரை மீது விழுந்து சேதமடைந்தன.

பெரும்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறையில் ராணி, சுரேஷ், ஒச்சம்மாள், அரசுமாயன், வெங்க–டாசலம், பட்டறராணி ஆகிய 6 பேரும் சாலையோரத்தில் பெட்டி கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

அந்த பகுதியில் பேயத்தேவர் மனைவி ராணி என்பவர் ஏலக்காய் தோட்டம் வைத்து விவசாயம் செய்து வருகின்றார்.

இந்த தோட்டத்தில் இலவ மரங்களை வெட்டி சாலை யோரங்களில் உள்ள தகர கடைகளின் மேற்கூரை மீது சாய்த்துள்ளனர்.

இதனால் கடைகள் அனைத்தும் நொறுங்கி பொருட்கள் சேதமடைந்தன. இது குறித்து தாண்டிக்குடி போலீசில் தோட்ட உரிமையாளர் ராணி மீது சுரேஷ் புகார் கொடுத்துள்ளார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News