உள்ளூர் செய்திகள்
டிப்பர் லாரியில் செம்மண் கடத்தல்
- இந்திராபள்ளி பகுதி தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே இந்திராபள்ளி பகுதி தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 2யூனிட் செம்மண் அனுமதியின்றி கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. அப்போது வண்டியை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் செம்மண் கடத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்து அதேபகுதியைச் சேர்ந்த டிரைவர் ரமேஷ் (வயது21), வண்டி உரிமையாளர் சோமனஅள்ளியைச் சேர்ந்த தர்மன் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.