உள்ளூர் செய்திகள்

திருவொற்றியூரில் திருநங்கை மர்ம மரணம்

Published On 2023-04-13 16:05 IST   |   Update On 2023-04-13 16:05:00 IST
  • போலீசார் விரைந்து வந்து திருநங்கையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • திருநங்கை ரேகா திருவொற்றியூருக்கு எதற்காக வந்தார்? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை:

கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் ரேகா (வயது40). திருநங்கை. இவர் இன்று அதிகாலை திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் சந்திப்பில் சாலையோரம் இறந்து கிடந்தார்.

அவரது உடலில் காயங்கள் இருந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சாத்தாங்காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து திருநங்கையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது.

கொருக்குப்பேட்டை சேர்ந்த திருநங்கை ரேகா திருவொற்றியூருக்கு எதற்காக வந்தார்? அவரை அழைத்து வந்தது யார்? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News