உள்ளூர் செய்திகள்

இயற்கை இடுபொருள் தயாரிப்பு குறித்து பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இயற்கை இடுபொருள் தயாரிப்பு குறித்து பயிற்சி

Published On 2023-04-07 08:59 GMT   |   Update On 2023-04-07 08:59 GMT
  • டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிக்கு பிறகு பணப்பயிர்களை பயிரிட அரசு உதவி செய்து வருகிறது.
  • இதனால் பூச்சி தாக்குதல் அதிகம் ஏற்பட்டு விவசாயத்தில் இழப்பு ஏற்படுகிறது.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவனம் சார்பில் கூட்டு பொறுப்பு குழுவை சேர்ந்த பெண்களுக்கு இயற்கை இடுபொருள் தயாரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

இயற்கை இடுபொருள் மற்றும் இயற்கை வேளாண் பயிற்சியாளர் பாலம் செந்தில்குமார் செயல்விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில்:-

இயற்கை இடுபொருள்க ளான பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மண்புழு உரம், மீன் அமிலம் உள்பட 12 வகையான இடுபொருட்கள் தயாரிக்கும் முறைகள் வேளாண் பயிர்களான நெல், உளுந்து, துவரை, தானியங்கள் உள்பட அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தும் முறைகள் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தார்.

டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிக்கு பிறகு பணப்பயிர்களை பயிரிட அரசு உதவி செய்து வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளால் நன்மை செய்யகூடிய மீன், நண்டு, நத்தைகள், சிலந்தி, குளவிகள் அழிந்து விடுகின்றன.

இதனால் பூச்சி தாக்குதல் அதிகம் ஏற்பட்டு விவசாயத்தில் இழப்பு ஏற்படுகிறது. ஒவ்வொருவரும் தொழில்முனைவோராக மாற வேண்டும். ஒருங்கிணைந்த வேளாண் பண்ணையை ஏற்படுத்தி நெல், தீவனம், மாடு, ஆடு, கோழி, மீன் வளர்ப்பு, காய்கறி, பழத்தோட்டம், தென்னை, வாழை, மூலிகை, மலர் செடிகள் போன்ற பயிர்களை சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம்.

இதற்கு அரசு, வங்கிகள் உதவி செய்து வருகிறது என்றார்.

பயிற்சியில் 50 பெண்கள் கலந்து கொண்டனர்முன்னதாக மகளிர் ஒருங்கிணைப்பாளர் நதியா அனைவரையும் வரவேற்றார்.

முடிவில் சுந்தரி நன்றி கூறினார். 

Tags:    

Similar News