- புளியங்கொட்டை, தானியங்களை விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்தார்.
- எதிரே வந்த கார் ஒன்று மகேந்திரன் மீது மோதியது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே நாகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது65). இவர் புளியங்கொட்டை, தானியங்களை விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் காரப்பட்டு வெண்ணாம்பள்ளி அருகே திருப்பத்தூர்-சேலம் மெயின்ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக எதிரே வந்த கார் ஒன்று மகேந்திரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஊத்தங்கரை போலீசார் உடனே அங்கு வந்து மகேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை தேடிவருகின்றனர்.