பொன்னேரியில் முட்டை கடையில் குட்கா- புகையிலை விற்ற வியாபாரி கைது
- பல்வேறு இடங்களில் குட்கா புகையிலை விற்பனை தொடர்ந்து நடந்து வருகிறது.
- போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீஸ்சூப்பிரண்டு சீபாஸ்கல்யாண் உத்தரவின் தீவிர நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.
பொன்னேரி:
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கட்கா, புகையிலை் உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்தாலோ பதுக்கி வைத்தாலோ சொத்துக்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
எனினும் பல்வேறு இடங்களில் குட்கா புகையிலை விற்பனை தொடர்ந்து நடந்து வருகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீஸ்சூப்பிரண்டு சீபாஸ்கல்யாண் உத்தரவின் தீவிர நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.
இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் .மகாலிங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பொன்னேரி பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது பொன்னேரி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள முட்டை கடையில் குட்கா, புகையிலை விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அந்த முட்டை கடையில் சோதனை செய்த போது குட்கா, புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து வியாபாரி மசூர் என்பவரை போலீசார் கைது செய்தனர். ரூ.20 ஆயிரம் ரொக்கம், தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.