உள்ளூர் செய்திகள்

சுற்றுலா சார்ந்த தொழில்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும்

Published On 2023-07-07 09:54 GMT   |   Update On 2023-07-07 09:54 GMT
  • சாகச சுற்றுலா, கேரவன் பஸ் நடத்துபவர்கள், கேரவன் பார்க்கு நடத்துபவர்கள் சுற்றுலா துறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • பதிவு செய்யாத நிறுவனங்கள் சுற்றுலா துறையில் பதிவு செய்ய வேண்டும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுற்றுலா சார்ந்த தொழில்களான உணவு மற்றும் உறைவிடம், கூடார சுற்றுலா (கேண்டீன்), சாகச சுற்றுலா, கேரவன் பஸ் நடத்துபவர்கள், கேரவன் பார்க்கு நடத்துபவர்கள் சுற்றுலா துறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த தொழில் செய்பவர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவு செய்யாத நிறுவனங்கள் சுற்றுலா துறையில் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இதற்காக பிரத்யேகமாக உள்ள இணையதள முகவரி மூலம் பதிவு செய்து கொள்ள முடியும். இது குறித்து உரிய தகவல்களை கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுலா அலுவலரிடம் 73977 15680 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.

இதுவரையில் சுற்றுலாத்துறையில் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தும் சுற்றுலா தொழில் புரிபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News