உள்ளூர் செய்திகள்
தொரைஹட்டிஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோவிலில் அன்னதானம்
- ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் தொடங்கி வைத்தார்.
- சிறப்பான வரவேற்பு அளிக்கபட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தொரைஹட்டி கிராமத்தில் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது.
விழாவினையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது. மேலும், கிராம மக்களின் ஆன்மீக பஜனை பாடல் நிகழ்ச்சியும் நடந்தது.
நேற்று காலை 10 மணி முதல் 3 மணி வரை ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், ஐயனை அழைத்துச் செல்லுதல், முடி இறக்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.
தொடர்ந்து, அன்னதான நிகழ்ச்சி நடந்தது. அன்னதான நிகழ்ச்சியை ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் தொடங்கி வைத்தார். முன்னதாக கோவில் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கபட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.