உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து ஒழுங்குபிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இலவசமாக தக்காளி வழங்கினார்.

ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டியவர்களுக்கு தக்காளி

Published On 2023-06-30 11:01 GMT   |   Update On 2023-06-30 11:01 GMT
  • ஹெல்மெட் அணிந்து சாலை விதிகளை மதித்து வந்தவர்களுக்கு ஒரு கிலோ தக்காளி இலசவமாக வழங்கப்பட்டது.
  • 50 நபர்களுக்கு தலா 1 கிலோ தக்காளி என்ற அளவில் 50 கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்பட்டது .

தஞ்சாவூர்:

தஞ்சை நகர போக்குவரத்து ஒழுங்குபிரிவு மற்றும் ஜோதி அறக்கட்டளை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, தஞ்சை பழைய பேருந்துநிலையம் அருகே நடந்தது .

தஞ்சை நகர போக்குவ ரத்து ஒழுங்குபிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி அந்த வழியாக இருசக்கர வாகன த்தில் ஹெல்மெட் அணிந்து சாலை விதிகளை மதித்து வந்தவர்களுக்கு நூதன முறையில் தலா 1 கிலோ தக்காளி இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி னார்.

அப்போது அவர் பேசுகையில் தஞ்சை மாநகரத்தில் விபத்து இல்லா நகரமாக உருவாக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இரு சக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் ஹெல்மெட் தலைக்கவசமும் நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் சீட்பெல்ட் அணியவும் வலியுறுத்துகிறோம் .

இந்த விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறோம் . தற்போது வரலாறு காணாத வகையில் தக்காளியின் விலை உயர்ந்து வருகிறது .

எனவே சாலை விதிகளை மதித்து வருபவர்களுக்கு ஜோதி அறக்கட்டளையுடன் இணைந்து இலவசமாக ஒரு கிலோ தக்காளி வழங்கி அதன் மூலம் பொதுமக்களுக்கு சாலை விதிகளை பின்பற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம் என்றார் .

நிகழ்ச்சியில் ஹெல்மெட் அணிந்து வந்த 50 நபர்களுக்கு தலா 1 கிலோ தக்காளி என்ற அளவில் 50 கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்பட்டது .

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் தலைமையில் அறக்கட்டளை மேலாளர் ஞான சுந்தரி , மேற்பார்வையாளர் கல்யா ணசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News