உள்ளூர் செய்திகள்

கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படை வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

கடலூரில் இன்று ஊர் காவல் படை பயிற்சி நிறைவு விழா

Published On 2023-08-31 07:20 GMT   |   Update On 2023-08-31 07:20 GMT
  • ஊர் காவல் படை பயிற்சியும், 10 பேருக்கு கடலோர காவல் குழுமத்தில் பணி புரிவதற்கான பயிற்சியும் கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
  • போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் ஊர் காவல் படையில் பணிபுரிவதற்கு 33 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 23 பேருக்குஊர் காவல் படை பயிற்சியும், 10 பேருக்கு கடலோர காவல் குழுமத்தில் பணி புரிவதற்கான பயிற்சியும் கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.கடந்த 45 நாட்களாக இவர்களுக்கு அடிப்படைக் கவாத்து பயிற்சி, நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த பயிற்சியின் நிறைவு விழா இன்று காலை கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

ஊர்க்காவல் படை விழுப்புரம் சரக உதவி தளபதி கேதர்நாதன் தலைமை தாங்கினார். வட்டார தளபதி அம்ஜத் கான் வரவேற்றார். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி முடித்த ஊர் காவல் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.பின்னர் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட 3 பேருக்கு பதக்கங்களை அணிவித்து கவுரவித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஆயுதப் படை ஆய்வாளர் அருள்செல்வன், ஊர் காவல் படை வட்டார துணை தளபதி கலாவதி, செய்தி தொடர்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News