உள்ளூர் செய்திகள்

தள்ளுவண்டி வியாபாரிகளிடம் லஞ்சம்: கலெக்டரிடம் புகார் மனு

Published On 2023-02-28 14:57 IST   |   Update On 2023-02-28 15:51:00 IST
  • தள்ளுவண்டி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் வைத்து செயல்பட்டு வருகின்றனர்.
  • வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டு என கோரிக்கை மனுவை வழங்கினர்.

தருமபுரி, 

தருமபுரி நகராட்சி சொந்தமான முக்கியமான மக்கள் சந்திக்கும் பகுதிகளில் அதிகளவு தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் கடை நடத்தி வருகின்றனர்.

இவர்களிடம் நகராட்சி சார்பில் சுங்கவரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்ட சிறு தள்ளுவண்டி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் வைத்து செயல்பட்டு வருகின்றனர்.

இவர்கள் முறையாக அரசு பதிவு பெற்ற சங்கம் ஆகும். மேலும் மத்திய, மாநில அரசுகளிடம் உரிமம் பெற்று முறையாக வரி செலுத்தி செயல்பட்டு வருகிறார்கள். இச்சங்கத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட சாலையோரமாக வியாபாரம் செய்யும் தொழிலாளர்களும், தள்ளுவண்டி வைத்து வியாபாரம் செய்யும் தொழிலாளர்களும் இணைந்து தொழில் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் தருமபுரி நகராட்சி அதிகாரி ஒருவர் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகில் பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் சாலையோரம் வியாபாரம் செய்பவர்களிடம் சென்று பகிரங்கமாக மிரட்டி இந்த ரோடு தனியாருக்கு சொந்தமான இடம்.

ஆகவே இந்த இடத்தில் நீங்கள் கடை வைக்க வேண்டுமென்றால் ஒரு தள்ளுவண்டிக்கு ரூ.1,000- வீதம் எனக்கு பணம் தரவேண்டும். இந்த பணம் உயரதிகாரிகள் வரை சென்று பிரித்து எடுத்துக்கொள்வார்கள் என்று கூறி பகிரங்கமாக பணம் தர சொல்லி மிரட்டி வருகிறார்.

இல்லையென்றால் கடை வைக்க அனுமதி தரமுடியாது என்றும் மிரட்டுகிறார். ஆகவே கலெக்டர் எங்கள் வாழ்வாதாரத்தை பறிக்க நினைத்து எங்களிடம் பணம் கேட்டு மிரட்டும் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுத்து எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டு என கோரிக்கை மனுவை வழங்கினர்.

Tags:    

Similar News