உள்ளூர் செய்திகள்

கர்நாடகாவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள்

Published On 2022-09-06 08:31 GMT   |   Update On 2022-09-06 08:31 GMT
  • பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர்.
  • சமூக ஆர்வலர்களும் , பொதுமக்களும் மிகவும் பாராட்டினர்.

ஓசூர்,

கர்நாடக மாநிலம் ராம்நகர் உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து மக்கள் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளனர்.

கன மழை காரணமாக, ராம்நகர் பகுதிகளில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டும், வீடுகள் சேதமடைந்தும் பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள காருபலா கிராமத்தில் இயங்கி வரும், தாருல் உலூம் ஹாஷ்மியா என்ற தனியார் கல்வி அறக்கட்டளையினர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும்வகையில் அதன் நிறுவனர் டாக்டர் இதாயத் ஷேக் தலைமையில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை, மினிலாரி மூலம் சூளகிரியிலிருந்து, ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் ராம்நகருக்கு நேற்று கொண்டு சென்றனர்.முன்னதாக, ஓசூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த இதாயத் ஷேக்" சாதி, மத பேதமின்றி பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

தமிழகத்தில் இருந்து வெள்ள நிவாரண பொருட்களை, பாதிக்கப்பட்ட கர்நாடக மக்களுக்காக கொண்டு சென்ற, கல்வி அறக்கட்டளையினரின் மனித நேயத்தை, சமூக ஆர்வலர்களும் , பொதுமக்களும் மிகவும் பாராட்டினர்.

Tags:    

Similar News