உள்ளூர் செய்திகள்
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம்
- குடிமை பணிகள் தேர்வு-2 பதவிகளுக்கான முதன்மை தேர்வு வருகிற 25-ந் தேதி நடக்கிறது.
- கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி ஆலோசனைகளை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய போட்டி தேர்வு, ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-2 பதவிகளுக்கான முதன்மை தேர்வு வருகிற 25-ந் தேதி நடக்கிறது.
கிருஷ்ணகிரி தாலுகாவில் 9 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
இதற்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி ஆலோசனைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் (பொறுப்பு) சுகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.