உள்ளூர் செய்திகள்

திருக்கழுக்குன்றத்தில் தமமுக ஆர்ப்பாட்டம், இந்துக்களின் கார்த்திகை மெகாதீபம்: போலீஸ் பாதுகாப்பு

Update: 2022-12-07 12:04 GMT
  • ஆர்ப்பாட்டத்தில் நாகை எம்.எல்.ஏ நவாஸ், கோவை அக்பர் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
  • திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாமல்லபுரம்:

திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகில் செங்கை தெற்கு மாவட்ட, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், பாபர் மசூதி இடிப்பு தினமான நேற்று, வழிபாட்டுரிமைப் பாதுகாப்பிற்கான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாகை எம்.எல்.ஏ நவாஸ், கோவை அக்பர்அலி, அகமதுபாஷா, முகமது அசாருதின், மகமது ஷெரீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் மேடை அருகே உள்ள வேதகிரீஸ்வரர் கோயில் மலையில் தான் கார்த்திகை தீபமும் ஏற்றப்பட இருந்தது. தீப விழாவிற்கு இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் என இந்து சமுதாய மக்களும் வருவதால், அங்கு மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உத்தரவின் பெயரில், திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஒரே நாளில் பாபர் மசூதி இடிப்பு தினமும், கார்த்திகை மெகா தீபம் நாளும் வந்ததால் பாதுகாப்பு சிக்கல் எழுந்துவிடக்கூடாது என்பதில் போலீசார் கவனமாக இருந்தனர். எந்தவித சர்ச்சைகளுக்கும் இடமளிக்காமல ஆர்ப்பாட்டமும், மெகாதீபமும் அமைதியாக நடந்து முடிந்ததால் அங்கு காவல் பணியில் ஈடுபட்ட போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Similar News