திருவண்ணாமலையில் ஆள் இல்லாத வீட்டில் நகை திருடிய பெண் கைது
- 8 பவுன் நகைகள் அபேஸ்
- கள்ள சாவி போட்டு துணிகரம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை குபேர நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் லட்சுமி (48) என்பவர் கடந்த மாதம் தேவனந்தல் கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் அன்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு திறக்கப் பட்டு கிடந்துள்ளது. உள்ளே சென்று பீரோவை பார்த்த போது பீரோவும் திறக்கப்பட்டு அதிலிருந்த 8 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றிருப்பதை தெரியவந்துள்ளது.
இது குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசில் லட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அதே பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயந்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் லட்சுமி வீட்டின் பூட்டை மாற்று சாவியில் திறந்து நகைகளை திருடிச்சென்றது தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலீசார் ஜெயந்தியை கைது செய்து அவரிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.