உள்ளூர் செய்திகள்
உரிமம் இல்லாமல் இயங்கி வந்த குடிநீர் நிறுவனத்திற்கு சீல்
- தரசான்று இல்லாமல் செயல்பட்டு வந்தது
- அதிகாரிகள் நடவடிக்கை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கனிகிலுப்பை பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு குடிநீர் நிறுவனம் உள்ளது.
குடிநீர் சுத்திகரிப்ப நிறுவனம் தரசான்று பெறாமல் இயங்கி வந்ததாக புகார் வந்தது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராமகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் சுத்திகரிப்பு குடிநீர் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் தரசான்று இல்லாமல் குடிநீர் நிறுவனம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனால் அந்த குடிநீர் நிறுவனத்தை தற்காலிகமாக மூடி சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.