உள்ளூர் செய்திகள்

சேத்துப்பட்டில் கொள்ளை சம்பவம் நடந்த வீடு. பீரோவில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு கொள்ளையர்கள் நகை பெட்டிகளை வீசி சென்ற காட்சி.

ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகை, பணம் கொள்ளை

Published On 2022-09-19 14:56 IST   |   Update On 2022-09-19 14:56:00 IST
  • போலீசார் விசாரணை
  • மர்ம நபரை தேடி வருகின்றனர்

சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, பழம்பேட்டை, கெங்கையம்மன், கோவில் தெரு என். ஜி. ஓ.நகர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 49), அரசு பள்ளி ஆசிரியர், இவரது மனைவி திரிபுரசுந்தரி (43), இவர் சேத்துப்பட்டு வட்டாரவள மையத்தில் ஆசிரியர் பயிற்றுநராக பணியாற்றி வருகிறார்.

இவர்கள் கடந்த 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை), மாலை வீட்டை பூட்டிக்கொண்டு திண்டிவனத்தில், உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தனர்.நேற்று திண்டிவனத்தில் இருந்து வீட்டிற்கு வந்தனர் வீட்டுக்கு வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 22 பவுன் நகை மற்றும் 1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை சென்றது தெரியவந்தது இதை சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர் முருகன், மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் திருபுரசுந்தரி சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

மேலும் அக்கம் பக்கம் உள்ள வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விவாதித்து வருகின்றனர்.

Tags:    

Similar News