உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை அய்யங்குளத்தின் கரையில் இன்று காலை மகாளய அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்த காட்சியை படத்தில் காணலாம்.

திருவண்ணாமலை அய்யங்குளக்கரையில் தர்ப்பணம் செய்து வழிபாடு

Published On 2022-09-25 14:22 IST   |   Update On 2022-09-25 14:22:00 IST
  • மகாளய அமாவாசையை முன்னிட்டு நடந்தது
  • ஏராளமானோர் குவிந்தனர்

திருவண்ணாமலை:

மகாளய அமாவாசை தினமான இன்று திருவண்ணாமலை அய்யங் குளக்கரையில் ஆயிரக்கணக்கானோர் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டார்கள்.

புரட்டாசி மாதம் பவுர்ணமி தினம் முதல் அமாவாசை வரை 15 நாட்கள் முடிய மகாளய பட்சம் என்று நம்மளுடைய முன்னோர்களால் அழைக்கப்படுகிறது.

மகாளய அமாவாசையான இன்று திருவண்ணாமலையில் அய்யன் குளம் என்று அழைக்கப்படுகின்ற இந்திர தீர்த்த குளக்கரையில் இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய மூதாதையர்களுக்கு வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழங்க எல் வைத்து தர்ப்பணம் கொடுத்து தங்களுடைய குடும்பத்தையும் வம்சத்தையும் முன்னோர்கள் குலதெய்வமாக இருந்து காக்க வேண்டி தர்ப்பணம் செய்து வழிபட்டார்கள்.

போளூர் பெருமாள் கோவில், கைலாசநாதர் கோவில், ஆஞ்சநேயர் கோவில் போன்ற இடங்களில் மகாளய அமாவாசை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

Tags:    

Similar News