தர்ணாவில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தையினர்.
ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விடுதலை சிறுத்தையினர் திடீர் தர்ணா
- பொறுப்பாளர்களை நியமிக்க வலியுறுத்தல்
- போலீசார் பேச்சு வார்த்தையால் போராட்டம் முடிவு
ஆரணி:
ஆரணி அடுத்த தச்சூர் ஊராட்சிக்குபட்ட சமத்துவபுரம் குடியிருப்பு பகுதியில் அரசின் சார்பாக குடியிருப்போர் அமைப்பின் தலைவர் துணை தலைவர் செயலாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்களை நியமனம் செய்ய மேற்கு ஆரணி ஊராட்சி ஓன்றிய அலுவலருக்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளன.
வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி சம்மந்தபட்ட பகுதியில் உள்ளவர்களிடம் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்று அறிவுறத்தினார்.
ஆனால் இதுவரையில் எந்த ஓரு முடிவும் ஏற்படவில்லை தி.மு.க. சார்பில் ஒருவரும் விடுதலைசிறுத்தை கட்சி சார்பில் ஒருவரும் ஓரே பொறுப்புக்கு தேர்வு செய்ய வேண்டுமென கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
ஆனால் ஆளுங்கட்சிக்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக கூறி ஆரணி ஊராட்சி மேற்கு ஓன்றிய அலுவலகத்தில் நுழைவாயில் முன்ப திடிரென தரையில் அமர்ந்து விடுதலைசிறுத்தை கட்சியை சேர்ந்த ஓன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து மேற்கு ஆரணி ஊராட்சி ஓன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி மேற்கு ஆரணி சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன்மற்றும் ஆரணி டவுன் போலீசார் ஆகியோர் சம்மந்தபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
இதில் வருகின்ற 29-ந்தேதி சமத்துவபுரத்தில் பெருபான்மை நிரூபித்து பொறுப்பாளர்கள் நியமிக்கபடுவார்கள் என முடிவு செய்யபட்டதால் தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது.