உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பேசிய காட்சி.

ஆரணியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும்

Published On 2023-03-07 14:56 IST   |   Update On 2023-03-07 14:56:00 IST
  • முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பேச்சு
  • ஜெயலலிதா பிறந்த நாள் பொதுகூட்டம் நடந்தது

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அண்ணாசிலை அருகில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா பொதுகூட்டம் நடந்தது. நகர செயலாளர் அசோக்குமார் வரவேற்றார்.

மாவட்டச் செயலாளர் தூசி மோகன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராசன் ஆகியோர் முன்னில வகித்தனர். மாவட்ட ஆவின் தலைவரும் நகர மன்ற துணை தலைவருமான பாரிபாபு தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் ஆரணி எம்.எல்.ஏவுமான சேவூர் ராமசந்திரன் தலைமை கழக பேச்சாளர் சிங்கமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பேசியதாவது:-

கடைக்கோடி தொண்டனும் அ.தி.மு.க.வில் அமைச்சராகலாம் அதே போல் நெசவாளராகிய என்னை எம்.எல்.ஏ சீட்டு கொடுத்து அமைச்சராக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா 2-வது முறை சீட்டு வழங்கியவர் எடப்பாடி பழனிசாமி ஆரணியில் இதே இடத்தில் பிரசாரம் செய்தபோது ஆரணியை மாவட்டமாக அறிவிக்கபடும் என்று வாக்குறுதி அளித்தார் அதே போல மீண்டும் விரைவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்தவுடன் ஆரணியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கபடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News