உள்ளூர் செய்திகள்
- சாலை விதிகள் மீறுபவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர்
- பெற்றோர்கள் வந்தால் மட்டுமே வாகனங்கள் ஒப்படைக்கப்படும்
வந்தவாசி:
வந்தவாசி பகுதிகளில் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் இரண்டுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் வந்தவாசி இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையில் போலீசார் சாலை விதிகள் மீறுபவர்களை மடக்கிப் பிடித்து வருகின்றனர்.
அதி வேகமாகவும் வருபவர்கள், பைக்கில் இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் பயணம் செய்பவர்கள், உரிமம் இல்லாத வாகனங்களின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகன உரிமையாளரின் பெற்றோர்களை அழைத்து அவர்கள் வந்தால் மட்டுமே வாகனங்கள் மீண்டும் வழங்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.