உள்ளூர் செய்திகள்

ஆரணி-வேலூர் சாலையில் மறியலில் பொதுமக்கள் ஈடுபட்ட காட்சி.

100 நாள் வேலை சரிவர வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2023-03-25 14:02 IST   |   Update On 2023-03-25 14:02:00 IST
  • போலீசார் பேச்சுவார்த்தை
  • சுழற்சி முறையில் வேலை வழங்கப்படும் என உறுதி

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள அத்திமலைப்பட்டு ஊராட்சியில் உள்ள கிராம சேவை மையத்தில் 100 நாள் திட்ட சமூகதணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சிமன்றதலைவர் சங்கர் தலைமை தாங்கினார்.

கூட்டத்திற்கு வந்த அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் 100 நாள் திட்டபணி யாளர்கள், தங்களுக்கு 100 நாள் வேலை சரிவர வழங்க வில்லை என்று கூறினர்.

மேலும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 100 நாள் வேலை சரிவர வழங்காததை கண்டித்து அவ்வூர் வழியாக செல்லும் வேலூர் - ஆரணி மெயின்ரோடு மேட்டுக்குடி கூட்ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஆரணி தாசில்தார் ஜெகதீ சன், வட்டார வளர்ச்சி அலுவலர் சவீதா, கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தரணி மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இனிவரும் காலங்களில் 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் வேலை வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.

அதன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக வாகனங்கள் மாற்றுப்பாதை யில் திருப்பி விடப்பட்டது.

Tags:    

Similar News