உள்ளூர் செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
- செய்யாறு அருகே தண்டரை கிராமத்தில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள தண்டரை கிராமத்தில் செய்யாறு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு செய்யாறு ஒன்றிய குழு தலைவர் நாவல்பாக்கம் பாபு தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஞானவேல், வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் ராஜி, செய்யாறு நகர மன்ற தலைவர் மோகனவேல் முன்னிலை வகித்தானர்.
ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஒ. ஜோதி எம்எல்ஏ கலந்துகொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ வ.அன்பழகன், வேல்முருகன், ஒன்றிய செயலாளர்கள் ஜே. கே.சீனிவாசன், தினகரன், சங்கர், திராவிட முருகன், ரவிக்குமார், வழக்கறிஞர் ஜி.அசோக், வெங்கடேஷ் பாபு மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.