உள்ளூர் செய்திகள்

மீட்கப்பட்ட பொருட்களை அதிகாரிகள் பார்வையிட்ட காட்சி.

பொங்கல் சீட்டு மோசடி செய்த சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் திருடி பதுக்கல்

Published On 2023-01-07 09:45 GMT   |   Update On 2023-01-07 09:45 GMT
  • அதிகாரிகள் மீட்டு சீல் வைத்தனர்
  • போலீசார் விசாரணை

வந்தவாசி:

வந்தவாசியில் தனியார் நிதி நிறுவனம் தீபாவளி மற்றும் பொங்கல் சீட்டு நடத்தி மளிகை பொருட்கள், தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், சீர்வரிசை சாமான்கள் உள்ளிட்டவை கவர்ச்சிகரமான பொருட்கள் தருவதாக பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி பல பேரிடம் கோடி கணக்கில் பணம் வசூல் செய்துள்ளனர்.

இந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் வந்தவாசி ஆரணி சாலையில் சூப்பர் மார்க்கெட் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகை வருவதால் அதற்குண்டான பொருட்களை வாங்குவதற்காக நிதி நிறுவனத்திற்கு பொது மக்கள் சென்றுள்ளனர்.

அப்போது அதன் உரிமையாளர் அங்கு இல்லாததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் செல்போன் மூலமும் அக்கம் பக்கம் தேடியும் கிடைக்காததால் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து பாதிக்க ப்பட்டவர்கள் திருவண்ணா மலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது சம்பந்தமாக போலீசார் வந்தவாசி ஆரணி சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடையை பூட்டி சீல் வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று சிலர் சூப்பர் மார்க்கெட்டின் பக்கவாட்டில் உள்ள இரும்பு ஷட்டரை உடைத்து உள்ளே இருக்கும் மளிகை பொருட்கள் சாமான்கள் உள்ளிட்டவைகளை திருடிக் கொண்டிருந்தனர்.

அங்கு வந்த போலீசாரை கண்டதும் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட போது அருகிலுள்ள கடைகளில் மளிகை பொருட்கள், பித்தளை சாமான்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட வை பதுக்கி வைத்தி ருந்தது தெரியவந்தது.

இதை யடுத்து தாசில்தார் முருகானந்தம் தலைமையில் போலீசார் பூட்டை உடைத்து பதுக்கி வைத்திருந்த பொருட்களை மீட்டு மீண்டும் சூப்பர் மார்க்கெ ட்டில் வைத்து சீல் வைத்தனர்.

சூப்பர் மார்க்கெட் கடைக்குள் புகுந்து கொ ள்ளைய டித்தவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News